சென்னை: ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும் என பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கல்லூரி மாணவர்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இது குறித்து செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும். கலாச்சாரத்தை காக்கவும், அதே சமயம் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் நல்வழி செய்ய வேண்டும் என்றார்.